மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு நாளைக்கு 2000 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள்!

- Advertisement -

பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுடன் ஒருங்கிணைந்து COVID-19 பரிசோதனைகளை (பி.சி.ஆர்) மேலும் 2,000 (ஒரு நாளைக்கு) ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக அலறி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுகாதாரத் துறைத் நிபுணர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மருத்துவ பீட தலைவர்கள் இடையே இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் கற்பித்தல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி செய்வதற்காக தங்களது சொந்த பி.சி.ஆர் கருவிகளைக் கொண்டுள்ளன.

- Advertisement -

எனவே பி.சி.ஆர் சோபரிசோதனைகளை கூடுதலாக கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம், கெளனியா பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் அறிவியல் பீட ஆய்வகங்கள் ஆகியவற்றில் உயர் கல்வி, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட உள்ளன.

கலந்துரையாடலில் உயர் கல்வி, தொழில்நுட்பம் அமைச்சர் பந்துலா குணவர்தன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர். உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, COVID-19 க்கான சோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான ஜனாதிபதி செயலணி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பணியாளர்கள் COVID-19 க்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் யாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யயப்படவில்லை.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதால், அந்த ஊழியர்களின் சுகாதார நிலை ஒரு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz