மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றதா..? வெளியான தகவல்…!

- Advertisement -

நாட்டின் 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அடுத்தவாரம் தளர்த்தப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதற்கமைய கொழும்பு கம்பஹா, புத்தளம் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்த மாவட்டங்களுககுமான ஊரடங்கு உத்தரவு இந்த மாத இறுதியில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் கண்டி ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் முனகெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19 மாவட்டங்களில் நேற்று மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 20ஆம் திகதிவரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட உள்ள ஊரடங்கு சட்டமானது அன்றைய தினம் மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொள்வனவு நடவடிக்கைகளை அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறும், அனாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்க எடுத்துள்ள நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், விவசாயம், சிறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் தமது தொழிலை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்துகள் தவிர்ந்த, மாவட்டங்களுக்கு இடையிலான ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே கருதப்படும் எனவும், இந்த பிரதேசங்களுக்குள் உள்நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயார்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபையின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பாதிப்பை...

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா தொற்று!

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களில் 40 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வுகான் மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள்...

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்றும் மனுக்கள் பரிசீலணை!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த...

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...