மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கில் அடையாள அட்டையைப் பயன்படுத்த போகின்றீர்களா? பொலிஸார் எச்சரிக்கை..!

- Advertisement -

தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி, அத்தியசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தொடர்பில், கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள், சிவில் உடையில் இது தொடர்பில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற பகுதிகளில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக,  வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரமே, தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் ஊடாக,  நாளொன்றுக்கு  ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு மாத்திரமே வெளியே செல்ல அனுமதி கிடைக்கும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz