மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடன் தொடர்ந்தும் கைகோர்க்கின்றது சீனா

- Advertisement -

இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சீனா மேலும் சில உதவிகளை வழங்கியுள்ளது.

இதற்கமைய, 211 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் ஊடாக நேற்றைய தினம் வழங்கப்பட்ட இந்தப் பொருட்களை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் நேர்மையான நண்பராக,  தொற்றுநோய்க்கு எதிரான இலங்கையின் போராட்டத்தை சீனா தொடர்ந்தும் உறுதியாக ஆதரிக்கும் என இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் மிகவும் நம்பிக்கையான நட்பு நாடு என்ற வகையில், இலங்கை அரசாங்கமும், மக்களும் சீனாவுக்கு நன்றி கடமைபட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது கூறியுள்ளார்

இலங்கையுடன் தொடர்ந்தும் கைகோர்க்கின்றது சீனா 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz