மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமணமான ஒரே மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக்பொஸ் பிரபலம்..!

- Advertisement -

திருமணமான ஒரே மாதத்தில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னடம் பிக்பொஸ் சீசன் 7இல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா.

- Advertisement -

இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர்.

இருவரும் கடந்த சில வருடங்கள் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருடைய தற்கொலை முயற்சி கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமான ஒரே மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக்பொஸ் பிரபலம்..! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz