மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமலுக்கு எதிராக களமிறங்கும் விஜய்சேதுபதி..! (புகைப்படம் இதோ)

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹெட்ரிக் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தின் பெயர் “விக்ரம்”.

- Advertisement -

கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியானது.

இருப்பினும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் நடிகர் கமல் பிசியானதால் ஷூட்டிங் ஆரம்பிகப்படாமல் இருக்கின்றது.

தேர்தலுக்கு பின்னரே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே பஹத் பாசில், லாரன்ஸ் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்தாண்டு நடந்த கமல்ஹாசனின் ‘உங்கள் நான்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, கமல்ஹாசனுடன் ஒரு முறையாவது பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவரின் விருப்பம் விக்ரம் படத்தின் மூலம் நிறைவேறுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கமலுக்கு எதிராக களமிறங்கும் விஜய்சேதுபதி..! (புகைப்படம் இதோ) 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz