மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார்? – விளக்கம் உள்ளே…

- Advertisement -

தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

12 ஆம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்.

- Advertisement -

கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்நதுடன், ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற பேட்டியில் இயக்குனர் செல்வராகவனிடம், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிவி பிரகாஷா அல்லது யுவன் சங்கர் ராஜாவா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், இருவருமே என் நண்பர்கள் தான், இருவரில் யார் பணியாற்ற உள்ளார்கள் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களின் பணிச்சுமையை பொருத்தது என தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார்? - விளக்கம் உள்ளே... 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz