மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே நாளில் ரிலிசாகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்…! விபரம் உள்ளே…!

- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

அவர் நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படம் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி ரிலீசாக உள்ளது.

- Advertisement -

இந்த ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பகுதியை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார்.

இந்நிலையில், அதே தினத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீசாக உள்ளது.

அந்தப் படத்தின் பெயர் ‘உப்பென்னா’. தெலுங்கு படமான இதில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தை பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜும், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் ரிலிசாகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்…! விபரம் உள்ளே…! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz