மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

- Advertisement -

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.

- Advertisement -

இதையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே கடந்த டிசம்பர் 14ஆம் திகதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு! 1

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் சில பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

வருகிற பெப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அண்ணாத்த படத்தை நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...

Developed by: SEOGlitz