மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது…!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பிணியாக இருப்பதாக தகவல்கள் வெளியான.

இதன்படி, கர்ப்பமாக இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை அனுஷ்மா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது பதிவிட்டு வந்தார்.

அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் படங்களும் டுவிட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு இன்று (11) அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பிரபல நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...! 1

இதனை, விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அனுஷ்கா சர்மாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை

சாதாரணதர  மாணவர்களின் கல்விசெயற்பாடுகளுக்காக  மேல் மாகாணத்தில் இன்று முதல்  பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா   அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலை வாகனசேவைகளில்...

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

Developed by: SEOGlitz