மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

- Advertisement -

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடாத்தாமல் கைவிடப்பட்டது.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கிருஷ்ணா இயக்கிய  சில்லுனு ஒரு காதல் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம்: பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழிப்புக்கள் பதிவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த...

நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

பதுளை மாவட்டத்தின் சொர்னாத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களினால் சூழலுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையில்...

COVAX திட்டத்தின் அடிப்படையில் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது: சுதர்ஷினி அறிவிப்பு!

நாட்டுக்கு மேலும் 2 இலட்சத்து 64 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள COVAX திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக,...

மாணவர்களுக்காக பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஓர் விசேட திட்டம்..!

தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாட்டை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற  “SKILLS SRI LANKA”  தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப...

Developed by: SEOGlitz