சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சிம்பு நடடிக்கும் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் சிம்புவின் 46 ஆவது படமாகும்.
இதன்படி, சிம்பு இந்த படத்துக்காக தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்திருந்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இப்படத்தின் இசையமைப்பு பணி முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ள அவர், தன்மீது நம்பிக்கை வைத்து பக்கபலமாக இருந்த சிம்பு மற்றும் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தான் பணியாற்றியதிலேயே வேகமாக முடிக்கப்பட்ட இரண்டாவது படம் இது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் பிசினஸ்மேன் என்கிற தெலுங்கு படத்தின் பணிகளை 2 மாதத்தில் முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.