மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை.

சமீபத்தில் திரையரங்குகள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது என்றும் செய்திகள் வெளியானது.

இதை அறிந்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம்.

ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் தியேட்டரில் வெளியாவதை படக்குழுவினர் உறுதி செய்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுமா…?

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தில் முதற்கட்ட தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, Oxford-AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது…!

தெமட்டக்கொட பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையினரால் முன்னெடுக்க்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, தெமட்டக்கொட பகுதியில்...

Developed by: SEOGlitz