நடிகர் கமலினால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இன்று மிகவும் சுவாரசியமான விடயங்கள் நடைபெறவுள்ளது.
பிக்பொஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்று தான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு சுவராஷ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிக்பொஸ் சீசன் 4 இல், கடந்த 50 நாட்களில் எத்தனையோ சண்டைகள் வந்திருந்தாலும் நேற்றிலிருந்து தான் சண்டை சூடு பிடித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் ஆரி-பாலாஜி, ஆரி-ரம்யா, அனிதா-நிஷா என பிக்பொஸ் வீடே ஒரே போர்க்களமாக இருந்தது.
அதே போல் இன்றும் அர்ச்சனா – பாலாஜியின் சண்டையும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த சண்டையாக சனம் மற்றும் சம்யுக்தா காட்சிகள் இன்றைய மூன்றாம் ப்ரமோவில் உள்ளன.
இன்றைய மூன்றாம் ப்ரமோவில், ‘நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நீங்கள் வாயை திறந்தால் ஒரே கலீஜ் ஆகத்தான் இருக்குது’ என்று சனம்ஷெட்டியிடம் சம்யுக்தா கூற, அதற்கு சனம் ’வாயைத் திறந்தால் கலீஜ் என்று சொல்வது நம்ம மைண்டில் கலீஜ் இருந்தால் தான் வாயில் வரும்’ என்று பதிலடி கொடுக்கிறார்.
மேலும் கேப்டன்ஷிப் டாஸ்க் குறித்து சனம் ஒரு கேள்வியை கேட்க அதற்கு சம்யுக்தா, ‘அது அவங்கவங்க வளர்ப்பை பொறுத்தது’ என்று கூறுவது சண்டையை இன்னும் அதிகரிக்க வைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே நேற்று போலவே இன்றும் பிக்பொஸ் வீடு ஒரே சண்டை சச்சரவுடன் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day51 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/camrcnHH0F
— Vijay Television (@vijaytelevision) November 24, 2020
#Day51 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/84whwGXtuC
— Vijay Television (@vijaytelevision) November 24, 2020
#Day51 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/iMwhD4aX36
— Vijay Television (@vijaytelevision) November 24, 2020