குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆக மாறியுள்ளார்.
மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிகா.
தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமானவர்.
இந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. இதையடுத்து நானும் ரௌவுடிதான், மிருதன், அஜித்தின் விஸ்வாசம் உட்பல பல படங்களில் நடித்துள்ளார்.
குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் தல அஜித் மகளாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் குழந்தையாக இருந்த அனிகா, தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக மாறியிருக்கும் அனிகாவை, குட்டி நயன்தாரா என கூறுவதில் மிகையில்லை.
நடிகை நயன்தாராவின் சாயலும் அவரிடம் அப்படியே இருப்பதால், இந்த பெயர் அவருக்கு பொருத்தம் தான் என்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோஷூட் படங்களை பதிவிட்டு வந்த அனிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வரும் என்று கணித்தார்கள்.
அதற்காகவே அவரும் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அனிகா, ஹீரோயினாக நடிக்க ரெடியாகி கொண்டிருந்தார். இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார்.
தெலுங்கு படம் ஒன்றில் அவர் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட படம், கப்பேலா.
அன்னாபென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை முகமது முஸ்தபா இயக்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் .ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இப்போது, இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் இயக்கிய முகமது முஸ்தபா தெலுங்கிலும் இயக்குகிறார். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கிறார்.
ஸ்ரீநாத் பாசி வேடத்தில் விஷ்வக் சென் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார் அன்னா பென். அவர் கேரக்டரில் அனிகா சுரேந்திரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.