மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸ் நிகழ்ச்சியை நடத்த முடியுமா? மீரா மிதுன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்!

- Advertisement -

இந்த வருடம் பிக்பொஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

தற்போது கமலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம் பிக்பொஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன்.

இந்த வருடம் பிக்பொஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னிடம் வரும் வரை பிக்பொஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என்று மீராமிதுன் கூறியிருக்கிறார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...

Developed by: SEOGlitz