நடிகர் ஆரவ் அவரது திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
காதலித்தை பெண்ணையே திருமணம் செய்துக் கொண்ட ஆரவ், கமல் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.
ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திருமணத்தன்று நடைபெற்ற நடன நிகழ்வில் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரவ் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.