மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

- Advertisement -

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -

மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்

எக்மோ கருவியூடாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார்.

கோவில்பட்டியில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் விவேக் , மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் 1987 ஆம் ஆண்டு அறிமுகமாகியதுடன் சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றார்

அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலராக செயற்பட்டதுடன் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz