மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்பு மற்றும் தனுஷ் படத்தில் நடித்த நடிகை வெளியிட்ட அதிரடி அதிர்ச்சி தகவல்..!

- Advertisement -

தமிழில் சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் 2010இல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய்.

- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் இரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

நடிகை ரிச்சா, கடந்த 2019ஆம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வரும் ரிச்சா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு மற்றும் தனுஷ் படத்தில் நடித்த நடிகை வெளியிட்ட அதிரடி அதிர்ச்சி தகவல்..! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz