மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுஷ்காவின் திரையுலகப்பயணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

- Advertisement -

நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், தலைக்கணம் இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறியுள்ளார்.

மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து, நடிகர் மாதவன், பேட்டி அளித்திருந்தார், அதில் அவர் கூறியதாவது “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதிதாக வந்திருந்தார். 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு இன்னும் உள்ளது.

அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார்.

சினிமா மீது அவருக்கு இருக்கின்ற அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’திரைப்படத்திற்க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் தலைக்கணம் இல்லை.

சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கின்றது. ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே தெரியும்.

அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.

ஓடிடி யில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓடிடிக்கு வந்து விட்டார்.

எதிர்காலம் எப்படியிருக்கும்? என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும். இவ்வாறு மாதவன் கூறியிருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz