மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸ் பிரபலம் முகின் ராவ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகென் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த முகென் ராவ், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு வெற்றியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

- Advertisement -

இவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி பெண் இயக்குனர் அஞ்சனா அலிகானின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இவர் இந்தப்படப்பிடிப்புக்கு முன்னர் நானி மற்றும் நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் முகெனுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தை சென்னையில் மாத்திரமே படமாக்க திட்டமிட்டு உள்ளனர். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

பிக்பொஸ் பிரபலம் முகின் ராவ் குறித்து வெளியான முக்கிய தகவல்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா!

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுள் 122 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை...

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

கம்பஹாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

Developed by: SEOGlitz