மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸ் நிகழ்ச்சி மீது குற்றம் சாட்டியுள்ள நடிகை!

- Advertisement -

சர்வதேச அளவில் பிரபலமான நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

- Advertisement -

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நான் பிக்பொஸ் நிகழ்ச்சியில கலந்து கொண்டதே ஆதரவற்ற குழந்தைகளோட சத்திர சிகிச்சை செலவுக்காகத்தான். நான் எப்போழுதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதை கண்ட இரசிகர்கள் பலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறிகிய்றனர். சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பொஸ் நிகழ்ச்சி மீது குற்றம் சாட்டியுள்ள நடிகை! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...

கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த...

Developed by: SEOGlitz