நடிகையர் திலகம் திரைப்படம் மூலம் தனது புகழை உயர்த்தியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இறுதியாக தமிழில் சர்க்கார் திரைப்படத்தில் 2018 ம் ஆண்டு நடித்தார்.
ஆனால் அதற்க்கு பிறகு இவரது படங்கள் தமிழில் எதுவும் வெளிவரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்பாராஜின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணனின் இசையில், அறிமுக இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக்கின் இயக்கத்தில் ‘பென்குவின்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 19 ம் திகதி Amazon prime Video வில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இன்று பெங்குவின் படத்தின் டீஸர் வெளியிடப்படவுள்ளது .
இதனை த்ரிஷா, தாப்ஸீ, சமந்தா, மஞ்சு வாரியார் ஆகியோர் 4 மொழிகளில் வெளியிடவுள்ளனர்