மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் இணையும் திரிஷா – அனுஷ்கா கூட்டணி?

- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் திரிஷாவும், அனுஷ்காவும், நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

என்னை அறிந்தால் படத்தில் ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையிலேயே தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக இரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டு இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார் கௌதம் மேனன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சிம்புவை வைத்து வேறு ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு கதாநாயகிகளாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz