மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகைகள் ஏன் அதிக சம்பளம் வாங்க கூடாது? – கொதிக்கும் தமன்னா!

- Advertisement -

கதாநாயகர்களைப் போல் ஏன் நடிகைகளுக்கும் அதிக சம்பளம் வழங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை தமன்னாவை தெலுங்கில் ரவிதேஜாவினது படத்தில் நடிக்க அணுகியிருந்தனர்.

- Advertisement -

ஆனால் அந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? கதாநாயகர்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா?

நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை என தமன்னா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...