மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

- Advertisement -

தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்திலேயே விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படமே தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும், இத்திரைப்படத்திலேயே நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

1992ல் வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்படாமல் நீண்ட காலமாக தாமதமாகி வருகின்றது.

தேவர் மகன் படத்தினது கதையில் நாசர் இறந்துவிட்ட நிலையில், அவரது மகனாக விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கமல்ஹாசனை பழிவாங்க துடிப்பது போல இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

சமீப காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துவரும் விஜய் சேதுபதி, தற்போது கமலுக்கு வில்லனாகவும் நடிக்கப் போகிறார்.

கமல்ஹாசனே இந்த படத்தினை இயக்கவுள்ளார் என கூறப்படும் நிலையில் அதற்கான பரீ-ப்ரொடக்ஷன் பணிகளும் முன்பே நடந்தது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் இந்தியன் 2 படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனமே தலைவன் இருக்கின்றான் படத்தையும் தயாரிக்கின்றது என்பதுடன், இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படத்தில் 19 வருடங்களுக்கு பின்னர் கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...