மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனது ஊழியர்களை பணிக்கு சைக்கிளில் வருமாறு ஊக்குவிக்கும் DFCC வங்கி..!

- Advertisement -

DFCC வங்கி தனது ஊழியர்களை பணிக்கு சைக்கிளில் வருவதை ஊக்குவித்து ஒரு
முன்னோடியாகச் செயற்படுகின்றது…

2030 ஆம் ஆண்டளவில் பேண்தகமை கொண்ட பணி- வாழ்க்கை முறையை அடையப்பெறல்’ என்பது 2020 – 2030 ஆம் ஆண்டிற்கான அதன் பேண்தகமை மூலோபாயத்தில்; DFCC வங்கி இனங்கண்டுள்ள பாரிய இலக்குகளில்
ஒன்றாகும்.

- Advertisement -

பேண்தகமை கொண்ட பணியிடங்கள் உட்பட ஆட்சி ஒழுங்கு முறை மூலம்
பேண்தகமை கொண்ட பணியிடங்களையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்தும்
முயற்சிகளை வங்கி மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் பொதுவாக வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்க்கை முறையிலும் இதே மாற்றத்தை அடைந்துகொள்ள உதவ முயற்சிக்கின்றது.

பன்முகத்தன்மை மற்றும் அரவணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பது முதற்கொண்டு, உற்பத்தித்திறன் சார்ந்த ஆரோக்கியம் மற்றும் பேண்தகமை கொண்ட நுகர்வு மற்றும் வாழ்க்கை முறை நடைமுறைகள் வரையிலான பல கூறுகள் இதில் அடங்கும்.

இது சம்பந்தமாக, வங்கியின் ஆரோக்கிய ஊக்குவிப்பு அணியான “OMMM” தொடங்கிய புதிய ‘Bike to Work’ முயற்சி, அதன் ஊழியர்கள் பேண்தகமை கொண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேண ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் வங்கி மட்டத்தில் அதனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும்.

வங்கி வலையமைப்பின் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை
ஊக்குவிப்பதற்கான முயற்சியாக ஒவ்வொரு மாதமும் “Bike to Work” தினம் ஏற்பாடு
செய்யப்படுவதால் இது ஒரு முறை மாத்திரம் இடம்பெறும் செயற்பாடாக அல்லாமல் ஒரு தொடர்ச்சியான செயற்பாடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

சைக்கிள் ஓட்டுதலை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்ள ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் சைக்கிள் ஓட்டுதலுக்கு அதிக முன்னுரிமை அளிக்க DFCC வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது.

பணிக்கு சைக்கிளில் வருவதை உத்தியோகபூர்வமாக அறிவித்து இந்த அளவிலான
முயற்சியை வங்கி ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால், நாட்டில் சைக்கிள் ஓட்டுதல் தொடர்பில் ஆதிக்கம் செலுத்தி அதை ஒரு வாழ்க்கை முறை தெரிவாக மாற்றியமைக்க DFCC வங்கி விரும்புகிறது.

இந்த முயற்சி ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் வலுவான
உறுதிப்பாட்டை நிரூபிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் நிதி
நிறுவனத்தின் நிலைப்பாட்டையும் இது எடுத்துக்காட்டுகிறது.

வேலைக்கு சைக்கிளில் வருவது வங்கியின் காபன் அடிச்சுவட்டைக் குறைக்கும் முயற்சியில் மறுக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், “Bike to Work” முயற்சி, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொறுப்புணர்வுமிக்க முறையில் வளத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு அர்த்தமுள்ள மற்றும் பேண்தகமை கொண்ட பங்களிப்பை உறுதி செய்வதில் DFCC வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் DFCC வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட OMMM முயற்சி, பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் நலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மேலும் பல செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்     

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும்
அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz