மெய்ப்பொருள் காண்பது அறிவு

CIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான இணையவழி கல்வி முறைமை ஆரம்பம்!

- Advertisement -

CIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக இணையவழி கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இலங்கையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

தொழில்சார் கணக்காளர்களின் சங்கம் இந்த கல்வி முறைமையினை கடந்த வருடம் இறுதியில் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் ஆரம்பித்தது.

இந்த நிலையிலே, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இணையவழி கல்வி முறைமையினை அண்மையில் ஆரம்பித்து வைத்தது.

இந்த நிகழ்வில் தொழில்சார் கணக்காளர்கள் சங்கத்தின் உலகளாவிய சந்தைகள் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் Irene Teng, CIMA தேச முகாமையாளர் Zahara Ansary, LSEG இன் பணிப்பாளரும் தலைமை நிதி உத்தியோகத்தருமான Fadhil Jiffry ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தொழில்சார் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்துவதில் CIMA மீண்டும் ஒரு தடவை புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக CIMA மாணவர் சங்கத் தலைவர் ஷெஹான் சேனாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

CIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான இணையவழி கல்வி முறைமை ஆரம்பம்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz