கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம் 76 புள்ளிகளாகக் காணப்பட்டது.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்தைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியே முதல் முறையாக 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.