2020 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட் 19 பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்க இரவு பகலாக பாடுபடும் வைத்தியர்கள் பாதுகாப்பு துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வொன்று வண்டேஜ் மற்றும் எபோனி ஹோல்டிங் நிறுவனத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு 2021 ஆம் ஆண்டுக்கான புதிய எதிர்பார்ப்பு என்ற எண்ணக்கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியர்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களை பலப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இதன் முதல் நிகழ்வு இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இதே வேளை அடுத்த நிகழ்வாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தலைமையில் கொழும்பு நகர சபைக்கு முன்னால் இடம் பெற்றது.
இதன் போது வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்கொடைகள் எபோனி ஹோல்ட்டிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.