மெய்ப்பொருள் காண்பது அறிவு

Association of Development Financing Institute in Asia and the Pacific Sustainability Development (ADFIAP) Awards 2020 விருதுகள் நிகழ்வில் DFCC வங்கி பிரகாசித்துள்ளது

- Advertisement -

XX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கி ‘அனைவருக்கும் வங்கி” என்ற தனது தொடர்ச்சியான தனிச்சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய தொற்றுநோய் நெருக்கடி நிலைமை காரணமாக மெய்நிகர் முறையில் இடம்பெற்ற 43 ஆவது யுனுகுஐயுP வருடாந்த பொதுக்கூட்டத்தில் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

2020 ஆம் ஆண்டுக்கான இந்நிகழ்வில் ADFIAP வங்கியானது மிகச் சிறந்த அபிவிருத்திச் செயற்திட்ட விருதுகளின் கீழ் இரண்டு சிறப்பு பாராட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

முதலாவதாக, மனித மூலதன மேம்பாட்டுப் பிரிவின் கீழ் “‘Together We Grow’” என்ற செயற்திட்டத்திற்காகவும், மற்றும் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவின் கீழ் “Samata English” என்ற செயற்திட்டத்திற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ADFIAP விருதுகள் நிகழ்ச்சித்திட்டம் 1997 இல் மணியளவில் இடம்பெற்ற “Summit on Development Finance” என்ற உச்சி மாநாட்டை ADFIAP நடாத்திய சமயத்தில் தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் நாட்காட்டியில் நிரந்தர ‘அங்கமாக’ மாறியுள்ளது.

ADFIAP “சிறந்த அபிவிருத்தி செயற்திட்ட விருதுகள்” அந்தந்த நாடுகளில் அபிவிருத்தியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திய செயற்திட்டங்களை மேற்கொண்ட மற்றும் அல்லது உதவி செய்த உறுப்பு-நிறுவனங்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

‘ “Samata English” ’ (அனைவருக்கும் ஆங்கிலம்) என்ற முன்னெடுப்பானது 2017 ஆம் ஆண்டில் னுகுஊஊ வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான செயற்திட்டமாகும்.

உதவி தேவைப்படும் இளைஞர்,யுவதிகளை இனங்கண்டு, அவர்களின் ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்காக இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளில் செயன்முறை செயற்பாடுகள், விளக்கப் படைப்பாக்க காட்சிகள், திறன் மேம்பாடு மற்றும் இலவச போதனா பயிற்சிகள் ஆகியவற்றை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒரு முன்னோடிச் செயற்திட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, பின்னர் 2018 ஆம் ஆண்டில் குருணாகல், கண்டி மற்றும் காலி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

அதே சமயம் 2019 ஆம் ஆண்டில் இந்த செயற்திட்டம் யாழ்ப்பாணம், பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

அதேபோல், ‘Together We Grow’ (நாம் ஒன்றாக வளர்ச்சி காண்போம்) என்ற முன்னெடுப்பானது DFCC வங்கியின் ஒரு இலட்சிய தாகம் கொண்ட முயற்சியாகும்.

இது அணிகளை மையமாகக் கொண்ட ஒரு மனநிலையை உருவாக்குவதன் மூலம் ஊழியர்களின் கூட்டுச் சிந்தனைகளில் சிறந்த மாற்றத்திற்கு வித்திடும் அதே சமயத்தில் அவர்கள் தமது அன்றாட வாழ்வில் இடையூறுகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ‘முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்” என்ற மனப்பாங்கைக் கட்டியெழுப்புகிறது.

இந்த இலட்சியத் தொலைநோக்கு வங்கியின் தன்னார்வலர்களின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்கள் அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் கவனிப்பும் மற்றும் பாராட்டும் கிடைக்கப்பெறுகின்றது என்ற உணர்வுடன் ஒரு நேர்மறையான, நற்பலன் அளிக்கின்ற மற்றும் மனதிற்கு இனிமையான பணிக் கலாச்சாரத்தை தோற்றுவிக்க உறுதிபூண்டுள்ளனர்.

இந்த இனங்காணல் அங்கீகாரம் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “DFCC வங்கிக்கு கிடைத்த பாராட்டு அங்கீகாரங்கள் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும், நமது பணியாளர்களுக்காகவும் நாங்கள் ஆரம்பித்த இரண்டு முக்கிய செயற்திட்டங்களை அங்கீகரித்தமைக்கு ADFIAP க்கு நன்றி கூறுகிறோம்.

எங்கள் பங்குதாரர்களுக்கு பெறுமான மதிப்பை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளை ஆராய்வதற்கு னுகுஊஊ வங்கி எப்போதும் முன்னணியில் உள்ளது. ‘To gether we grow’ செயற்திட்டம் இப்போது பலதரப்பட்ட மாணவர்கள் தங்கள் விரும்பும் தொழிற் சந்தைகளில் மேம்பட்ட பேச்சுச்திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் நுழைவதை உறுதி செய்துள்ளது.

இதேபோல், ‘never say never’ எண்ணக்கருவானது னுகுஊஊ பணியாளர்கள் மத்தியில் மிக உயர்ந்த தராதரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிக்கிறது, இது எதேச்சையாக ஒரு நேர்மறையான பணிக் கலாச்சாரத்தை தோற்றுவிக்குகிறது, இது ஊழியர்களுக்கு னுகுஊஊ வங்கியின் ஒரு அங்கமாக இருப்பதற்கான பெருமையை அளிக்கிறது. எங்கள் முயற்சிகளை அங்கீகரித்தமைக்காக ADFIAP இல் உள்ள நடுவர் சபைக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கும் அதேசமயம், இந்த விருதுகளை தலைசிறந்த மேன்மையை முன்னெடுப்பதில் அயராது உழைத்து வருகின்ற னுகுஊஊ இன் ஊழியர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தொடர்பில்

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கும், பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையிலேயே, அவர்களுக்கு தொற்று உறுதி...

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

Developed by: SEOGlitz