மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்

- Advertisement -

Swadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்‘ (Swadeshi Khomba Baby Hoda Purudu)  எனப் பெயரிடப்பட்டுள்ள நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில், சபுகஸ்கந்த சோபித்த வித்தியாலயத்தின் (ஆரம்பப் பிரிவு) தரம் 3 ஐச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -

Swadeshi Industrial Works PLC இன் ஊடகப் பேச்சாளார் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், 12 நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்திருந்ததுடன், அதன் பின்னர் யுனிசெப் நிபுணர் (நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்) திரு.நிலுஷா பட்டபெந்தி 12 படிமுறைகளில் கைகளைக் கழுவுதல் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

இதன் போது நல்ல பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தும் தொடர்பில் அரங்கேற்றப்பட்ட நாடகத்துடன் கை கழுவுதல் தொடர்பான பாடலொன்றும் பாடசாலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை சிறுவர்கள் நன்கு அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந் நிகழ்வானது 50 மாணவர்கள் தமது கலைத் திறனை வெளிப்படுத்திய ‘நல்ல பழக்கவழக்கங்கள்’ சித்திர போட்டியுடன் நிறைவு பெற்றது.

“நல்ல பழக்கவழக்கங்கள் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதையும், அவை எப்போதும் குழந்தைகளிடையே வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டோம்.

எனவே, பாடசாலைக்குள்ளேயே  நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு பலகைகளை பொருத்துவதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்தோம்.

மாணவர்கள் இதனைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை இவை நினைவூட்டும்.

யுனிசெப் அமைப்பின் கைகளைக் கழுவும் வழிகாட்டுதலை உள்ளடக்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, இத்தகைய ஆற்றல்மிகு சமூக வலுவூட்டல் திட்டங்களை நடாத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என ‘நல்ல பழக்கவழக்கங்கள்’ விழிப்புணர்வு பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த Swadeshi Industrial Works PLC இன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

‘நல்ல பழக்கவழக்கங்கள்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஓர் அங்கமாக, சுவதேசி கொஹம்ப பேபி குழுவானது யுனிசெப் வழிகாட்டுதலின் அடிப்படையில் கை கழுவுவதற்கான சரியான 12 படிமுறைகளைக் காட்சிப்படுத்தும் 12 விழிப்புணர்வு பலகைகளை பாடாசாலையில் பொருத்தியதோடு, கை கழுவும் 12 படிமுறைகளைக் காட்டும் கை கழுவும் தொட்டிகளையும் நன்கொடையாக வழங்கியது.

2019 ஆம் ஆண்டில், Swadeshi நிறுவனம் யுனிசெப் அமைப்பின் BetterParenting.LK உடன் ஒரு புரட்சிகர பங்குடமையில் இணைந்து கொண்டதன் ஊடாக குழந்தை பராமரிப்பு, அபிவிருத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த நிபுணர்களின் தகவல்களை வழங்கும் இந்த ஒன்லைன் தளத்துக்கு சுவதேசி ஆதரவளித்தது.

சுவதேசி மற்றும் யுனிசெப் அமைப்பின் BetterParenting.LK ஆகிய இரண்டுமே, பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த ஆரம்பத்தை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம், இளைஞர் தலைமுறையானது அவர்களின் முழு திறனையும் அடைந்து கொள்வதற்கு வலுவூட்டல் என்ற இணைந்த நோக்கத்தைக் கொண்டுள்ளன.

Swadeshi Industrial Works PLC தொடர்ச்சியாக உள்நாட்டு சமூகங்களை வலுப்படுத்தி வருகின்றது.

இதற்கான முயற்சிகளில் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆண்டுதோறும் ஆலோக பூஜைகளுக்கு ஆதரவளித்தல், வேப்பம் மரம் நடுதல், வறண்ட வலயத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், பாடசாலை குழந்தைகளுக்கான கல்விக்கான பொருட்கள் மற்றும் பாடசாலைகள், கோயில்கள் மற்றும் ரயில்வேகளுக்கான கை கழுவும் தொட்டி வழங்குதல் போன்றவை சிலவாகும்.

80 ஆண்டுகளாக இலங்கையர்களின் நம்பிக்கைக்குரிய சுவதேசி கொஹம்ப பேபி, இலங்கையின் முதல் தர மூலிகை குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமென்பதுடன், இது கொஹம்ப பேபி சவர்க்காரம் (மூலிகை, புளோரல், மரமஞ்சள் மற்றும் அவகாடோ), கிரீம், கொலோன், எண்ணெய், ஷாம்பு மற்றும் பரிசுப் பொதி ஆகிய தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ளது.

அனைத்து கொஹம்ப பேபி சவர்க்காரங்களிலும் வேம்பின் அதிசய மூலிகை மூலப்பொருள் உள்ளது.

இது குழந்தையின் தோலை இயற்கையாகவே கிருமிகளிலிருந்தும் எரிச்சலிலிருந்தும் பாதுகாக்கிறது.

கொஹம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் தோலுக்கு இனிமையான வாசனையுடன் அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கும், உள்ளூர் சந்தையில் சிறந்த மூலிகைகளின் கலவையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒரேயொரு தயாரிப்பாகும்.

இலங்கையில் மூலிகை தனிநபர் பராமரிப்பு பிரிவின் முன்னோடியான, Swadeshi Industrial Works PLC, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமென்பதுடன், 1941 இல் ஒருங்கிணைக்கப்பட்டது.

சுவதேசி தயாரிக்கும் அனைத்து பொருட்களும் 100% விலங்கு சேர்மானங்கள் அற்றவை என்பதுடன் ஆரோக்கியமானவை என்று நிரூபிக்கப்பட்டவையாகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz