மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிளாஸ்டி சைக்கிள் – லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு!

- Advertisement -

பிளாஸ்டிசைக்கிள், லாப்ஸ் மற்றும் க்ளோமார்க் சிறப்பு அங்காடிகளை தங்கள் சேகரிப்பு தொட்டி வலைப்பின்னலில் இணைத்துள்ளது.

பிளாஸ்டிசைக்கிள், இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது.

- Advertisement -

சூப்பர்மார்க்கெட் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை வழங்குவது பொறுப்பான நுகர்வோருக்கு வசதியானது என்ற நம்பிக்கையுடன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறையாக இதனை கையாளுகிறது.

பிளாஸ்டிசைக்கிள் லாப்ஸ் மற்றும் ஸொப்ட் லோஜிக் க்ளோமார்க் சிறப்பு அங்காடியுடன் கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் ஆரம்ப கட்ட சேகரிப்பு தொட்டிகளை வைத்துள்ளது.

லாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லிலந்தி ஹெராத் கூறுகையில், ‘பசுமையான சூழலுக்கு நாங்கள் செய்யும் பங்களிப்பானது தூய்மையான மற்றும் நிலையான ஓர் உலகத்திற்கு சாதகமாக பங்களிக்க முடியும் என்று லாப்ஸில் நாம் நம்புகிறோம்.

ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக, சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதன் எதிர்மறையான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்க நாம் தொடர்ச்சியாக முயற்சிப்போம்.

‘ தற்போது, பி.இ.டி போத்தல்கள், குளிர்களி கொள்கலன்கள் மற்றும் ஷாம்பு போத்தல்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து பிளாஸ்டிக்குகளையும் சேகரிக்க ராஜகிரியா, பெபிலியானா, மகரகம, கெஸ்பேவ மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களிலுள்ள லாப்ஸ் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிசைக்கிள் சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கொட்டாவ, தெல்கந்த மற்றும் நாவல ஆகிய பிரதேசங்களிலுள்ள க்ளோமார்க் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியைப் பற்றி பேசிய சொப்ட்லோஜிக் சூப்பர்மார்கெட்ஸ் (பி வி டி) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆண்ட்ரூ டால்பி, ‘இலங்கையில் ஒரு சமூகப் பொறுப்புள்ள அமைப்பாக குளோமார்க் எப்போதும் வித்தியாசமான ஒன்றை வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் வசதியையும் அளித்து வருகின்றது.

இதை ஆதரிக்க, விற்பனை நிலையங்களில் உக்கக்கூடிய பொதிகளை பயன்படுத்துதல் மற்றும் மறுபயன்பாட்ட்டிற்கு உட்படுத்தக்கூடிய பைகளை ஊக்குவித்தல் போன்ற சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு நடக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மேலும், சூரிய ஆற்றல் மற்றும் புதிய பசுமையான விற்பனை நிலையங்கள் புதிய தலைமுறையின் எதிர்காலத்திற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

எனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் அதிக வசதியை வழங்க பிளாஸ்டிசைக்கிள் உடனான வளர்ந்து வரும் இக்கூட்டு முயற்சியினை நாம் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.’

எம்முடன் இணைந்த முதல் சிறப்பு அங்காடி சங்கிலியான கீல்ஸ், இப்போது மேற்கு மாகாணத்தின் 43 விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை நிறுவியுள்ளது.

மேலும், ஒரு மூடிய-சுழல் மறுசுழற்சி முறையை உறுதி செய்வதற்காக, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பிளாஸ்டிசைக்கிள் இலங்கை மறுசுழற்சி சங்கம் (எஸ்.எல்.ஆர்.ஏ) மற்றும் ஈகோ-ஸ்பிண்டில்ஸ் (பிபிபிஎல் ஹோல்டிங்ஸ் பி.எல்.சியின் துணை நிறுவனம்) போன்ற உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

உலகளவில் துணி உற்பத்தியாளர்களுக்கான நூல் மற்றும் துப்புரவு கருவிகளுக்கான மோனோஃபிலமென்ட்கள் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பாவித்த பிளாஸ்டிக்குகள் மூலம் தயாரிக்க இக்கூட்டு முயற்சி வழி வகுக்கின்றது.

இலங்கையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்குவதற்காக இதுபோன்ற எண்ணம் கொண்ட அமைப்புகளுடன் தொடர்ந்து பணியாற்றுவதே பிளாஸ்டிசைக்கிளின் உத்தியாகும்.

பிளாஸ்டிசைக்கிள் தொடர்ந்து 4சு களை ஊக்குவிக்கிறது – ‘மறுத்தல் (சுநகரளந), குறைத்தல் (சுநனரஉந), மீள்பயன்படுத்தல் (சுநரளந) மற்றும் மறுசுழற்சி (சுநஉலஉடந) ‘ ஆகியவை, மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டது: பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பகுத்தறிவதற்கும் ஊக்குவித்தல், பொறுப்பான அப்புறப்படுத்தலை ஆதரித்தல்; மற்றும் மறுசுழற்சி முயற்சிகளை ஊக்குவித்தல். இந்த திட்டம், இன்றுவரை 63 மெட்ரிக் டொன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொறுப்பான அப்புறப்படுத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

பிளாஸ்டிசைக்கிள் கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி. எல். சி (ஜே. கே. எச்) இன் சமூக தொழில் முயற்சி திட்டமாகும.; 13,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜான் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 14 ஆண்டுகளாக இலங்கையின ; ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ. நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே. கே. எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ நோக்கினை நோக்கி பயணிக்கின்றது.

பிளாஸ்டி சைக்கிள் - லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு! 1 பிளாஸ்டி சைக்கிள் - லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

கம்பஹாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz