மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு  அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை!

- Advertisement -

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்கள் இலவச எடுப்பிப்பு மற்றும் விநியோக சேவையைப் பெறுவதுடன், இது வசதியான ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புக்கு வழி செய்கின்றது.

- Advertisement -

இந்த வசதியான விரைவு அஞ்சல் சேவையானது பழுதுபார்ப்பு மற்றும் பயண செலவுகளில் நேரத்தை மீதப்படுத்தும் அதேவேளை போக்குவரத்து நெரிசலில் பயணிக்க வேண்டிய தேவையையும், நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவையையும் நீக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பயன்மிக்கதாக அமையவுள்ளது.

“எமது சேவை வழங்கலின் போது வாடிக்கையாளரின் சௌகரியம் மற்றும் திருப்தியே எமக்கு முக்கியமானதாகும். இந்த வீட்டுக்கு வீடு விரைவு  தபால்  மூலமான பழுதுபார்ப்பு சேவையானது பழுதுபார்ப்புக்கு செலவிட்ட நேரத்தை மீதப்படுத்த உதவுவதுடன், எங்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைத்து சாதன பழுதுபார்ப்புகளையும் உகந்த முறையில் முன்னெடுப்பதால்  வாடிக்கையாளர்கள் பழுதுபார்ப்பு தொடர்பில் கவலைப்பட தேவையில்லை.

அனைத்து பழுதுபார்ப்பு சேவைகளும் அனுபவம் வாய்ந்த Huawei மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்களால் முன்னெடுக்கப்படுவதுடன், அவர்கள் இச் சேவையில் சிறந்த சேவைகளை வழங்கி தம்மை நன்கு நிரூபித்தவர்களாவர்.

இந்த மிகவும் நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாத பழுதுபார்க்கும் சேவையைப் பயன்படுத்த அனைத்து Huawei வாடிக்கையாளர்களையும் அழைக்கிறோம்,”என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு தெரிவித்தார்.

உத்தரவாதக் காலத்துக்குட்பட்ட சாதனங்கள் இலவசமாக பழுதுபார்க்கப்படும் அதேவேளை, உத்தரவாத நிபந்தனைகளுக்கு உட்படாத சாதனங்களுக்கு உதிரிப் பாகங்களுக்கான செலவு உள்ளிட்ட பழுதுபார்க்கும் கட்டணம் அறவிடப்படும்.

சேகரிக்கப்பட்ட தொடர்பு விபரங்கள் ஊடாக பழுதுபார்ப்பு செயற்பாட்டின் முன்னேற்றங்கள் குறித்து சேவை மையம் தொடர்ந்து வாடிக்கையாளருக்கு தகவல்களை வழங்கும்.

இந்த சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரு எளிய நடைமுறையைப் பின்பற்றலாம் என்பதுடன், இது சேவையின் உறுதிப்பாட்டை மேலும் உறுதி செய்யும்.

வாடிக்கையாளர்கள் தமது ஸ்மார்ட்போன் தரவை பிரதி எடுத்துகொள்ள முடியுமென்பதுடன், பின்னர் அனைத்து தனிப்பட்ட தரவு, கடவுச்சொற்களையும் நீக்கிக் கொள்ள முடியும். இதனால் தனியுரிமை தொடர்பான கவலைகள் எதுவும் ஏற்படாது.

வாடிக்கையாளர்கள் தேவையான இடத்திலிருந்து சாதனத்தை எடுப்பிக்க  011 – 2423017 என்ற இலக்கத்தின் ஊடாக Huawei அழைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு விரைவு அஞ்சல்  சேவையை தொடர்பு விபரங்கள், முகவரி, சாதன வரிசை எண் / IMEI எண் மற்றும் குறைபாடுகள் பற்றிய விபரங்களை வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் .

போக்குவரத்தின் போதான எந்தவொரு சேதத்தையும் தடுக்க, சாதனத்தை அசல் பெட்டியில் பொதி செய்ய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் விரைவு அஞ்சல் நிறுவனத்திடமிருந்து சேகரிப்புக்கான ஆதாரத்தைப் பெறலாம்.

சாதனங்கள் சரியாக திருத்தப்பட்டுள்ளதா என கைதேர்ந்த மொபைல் வல்லுனர்களால் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு, விரைவு அஞ்சல் ஊடாக விநியோக முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஸ்மார்ட்போன் ஜாம்பவானான Huawei நன்கறியப்பட்ட விருது வழங்கும் நிகழ்வுகளில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய வர்த்தகநாம சுட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.

BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Interbrandஇன் சிறந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக, கொழும்பு வரையில் காற்றின் வேகம் அதிகரித்து...

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக fifa தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களின் பின்னர்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட  அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

Developed by: SEOGlitz