புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, அறிமுகப்படுத்தும் ‘’Huawei Service Mid-year Fiesta’’, 2020 ஜூன் 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தங்கள் ஸ்மார்ட் சாதனங்களை பழுதுபார்க்கக் காத்திருக்கும் பாவனையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஸ்மார்ட்போன் திருத்த வேலைகளுக்கு விசேட கழிவுகள் மற்றும் அன்பளிப்புகள் ஆகியனவற்றையும் குறித்த காலப்பகுதியில் Huawei வழங்கவுள்ளது.
இக்காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட Huawei ஸ்மார்ட்போன்களுக்கான அசல் Huawei உதிரிப்பாகங்களுக்கு 20% விலைக்கழிவு வழங்கப்படுவதுடன், Huawei சேவை நிலையங்களுக்கு நேரடியாக வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச திரை பாதுகாப்பு மெல்லுறை உட்பட ஒரு இலவச அன்பளிப்பினையும் பெறவுள்ளனர்.
ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புகள் Huawei சான்றளிக்கப்பட்ட மொபைல் பொறியியலாளர்களால் மேற்கொள்ளப்படும் அதேவேளை அனைத்து பழுதுபார்ப்புகளுக்கும் மூன்று மாதகால இலவசமாக உத்தரவாதத்தை அறிவிப்பதில் Huawei மகிழ்ச்சியடைகிறது.
அதன் சேவைகளில் நிவாரணங்களை மேலும் விரிவுபடுத்தி, Huawei மின்கல மாற்றல்களுக்கு சிறப்பு கழிவுகளை வழங்குவதுடன், இந்த சலுகைகள் அனைத்தும் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு புதிய வாழ்வை அளிக்கும் முயற்சியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
Huawei Service Mid-year Fiesta மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருட நடுப்பகுதி சலுகையாகும். இது பல அனுகூலங்களுடன், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான சலுகைகளுடன் வருகின்றது.
கடந்த இரண்டு மாதங்கள் பாவனையாளர்கள் Huawei சேவை நிலையங்களை அடைய முடியாத நிலை இருந்ததுடன், தற்போது இயல்பு நிலைக்கு திரும்புவதால், பாவனையாளர்கள் எளிதில் சேவை நிலையங்களுக்குச் சென்று தங்கள் ஸ்மார்ட்போன்களை பழுதுபார்த்து, எங்கள் அற்புதமான சலுகைகளையும் பெறலாம்,’’ என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு தெரிவித்தார்.
“சேவை மையங்களுக்கு செல்ல முடியாத நிலையில், Huawei support app மற்றும் அதன் புதுமையான அம்சங்களும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியாக இருந்ததுடன், தொலைநிலை ஆதரவு சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த அப்ளிகேஷனை தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.
பல Huawei சாதனங்களைக் கொண்ட எந்தவொரு பாவனையாளருக்கும் இதன் ‘சாதன மையம்’ ஒரு விரிவான தீர்வாக அமைந்துள்ளது”, என அவர் மேலும் தெரிவித்தார்.
சாதன மையம், ஒன்லைன் சிக்கல்தீர்வு, ஸ்மார்ட் நோயறிதல், சேவை நிலையங்களைக் கண்டறிதல் மற்றும் உதிரி பாகங்களின் விலைகள் போன்ற பல புதுமையான அம்சங்களுடன் Huawei Support App இன் அண்மைய பதிப்பை Huawei அண்மையில் மீள் அறிமுகம் செய்தது.
பழுதுபார்த்தல் சேவையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு புதுமையான தெரிவையும் இந்த உள்ளமைக்கப்பட்ட அப்ளிகேஷன் கொண்டுள்ளது. பிரத்தியேக பழுது முன்னேற்றப் பிரிவில் பாவனையாளர்கள் ஸ்மார்ட்போனின் வரிசை எண்ணை பதிவு செய்தவுடன், பழுதுபார்ப்பு செயற்பாட்டின் முன்னேற்றத்தை Huawei support app வழங்குவதால் பாவனையாளர்கள் சேவை மையங்களைத் தொடர்புகொண்டு பழுதுபார்க்கும் செயற்பாட்டின் நிலையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போன்கள் முதல் டெப்லட்டுக்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் மடிகணினிகள் வரை ஒரே இடத்தில் பல Huawei சாதனங்களை வசதியாக முகாமை செய்ய Huawei சாதன மையம் உதவுகின்றது.
சாதன சுட்டளவு, நன்மைகள் மற்றும் உத்தரவாதத்தைப் பற்றிய பயனுள்ள விபரங்களை சாதன மையம் வழங்குகிறது. உதவிக்குறிப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், திரை நிற உருத்திரிவை மீட்டெடுப்பது, மின் நுகர்வைக் குறைத்தல் மற்றும் புகைப்படங்களை மேம்படுத்துதல் போன்ற பொதுவான ஸ்மார்ட்போன் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க ஒரு ‘‘ உதவி ’’ தெரிவையும் இது கொண்டுள்ளது.
ஒரு Huawei சேவை நிலையத்தில் சாதன விவரங்களில் பார் குறியீட்டை காண்பிப்பது இப்போது உங்கள் தேவைக்கு உடனடியாக ஊழியர்கள் பணியாற்ற போதுமானதாக உள்ளது.
பாவனையாளர்கள் Support appற்குச் சென்று, பின்வரும் படிமுறையின் கீழ் சாதனங்களை சேர்க்க முடியும்; Support app, select Me> My Devices, enter Device Center, tap on + icon (மேல் வலது மூலை). சாதனங்களை இணைக்க சாதனத்தில் காட்டப்படும் பார் குறியீடு அல்லது அப்ளிகேஷனில் காட்சிப்படுத்தப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கான தெரிவும் தரப்பட்டுள்ளது.
BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes Worldஇன் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 25ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. Interbrand இன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.