மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹேமாஸ் குழுமத்தினது தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா நியமனம்!

- Advertisement -

ஹேமாஸ் குழுமத்தினது தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹேமாஸ் குழுமத்தினது முதலாவது பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக ஹேமாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறித்த அறிவிப்பினை ஹேமாஸ் குழுமத்தினது தலைவர் ஹூசைன் எசுபல்லி (Husein Esufally) வெளியிட்டுள்ளதுடன், நிறவனத்தினது திட்டமிடப்பட்ட கட்டமைப்பின் படி கஸ்தூரி செல்லராஜா வில்சனினது திறமையின் அடிப்படையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் குழுத் தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சனை நியமிப்பதாக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் எங்களுடன் இருந்த கஸ்தூரி ஹேமாஸுக்கு புதியவரல்ல, நீண்டகால சக ஊழியர் குழுவில் மிக உயர்ந்த நிர்வாக பதவியை வகிக்க உயர்ந்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என ஹேமாஸ் குழுமத்தினது தலைவர் ஹூசைன் எசுபல்லி (Husein Esufally) குறிப்பிட்டுள்ளார்.

அவரது நியமனம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இவருக்கு முன்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவன் தலைமை, ஹேமாஸ் நிறுவனத்தினை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, நோக்கமான மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்ற உதவியது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹேமாஸில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு நிறுவனத்துடனான பயணத்தில் கஸ்தூரி தலைமைச் செயலாக்க அதிகாரியாக உயர்ந்தார்.

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டில் அவர் குழுவின் விமான போக்குவரத்து, பயண மற்றும் இயக்கம் வணிகங்களின் தலைமையை ஏற்றுக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டில், கஸ்தூரி முன்னணி ஹேமாஸ் மருந்தியல் நிறுவனங்களுடன் பணிபுரிந்தார், அவர் அந்த நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாக பணியாற்றினார், அதே நேரத்தில் ஒரு சவாலான ஒழுங்குமுறை சூழலில் நிலையான வளர்ச்சியை ஹேமாஸ் குழுமத்திற்கு வழங்கினார்.

கஸ்தூரி இங்கிலாந்தின் சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஒப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸின் உறுப்பினராக உள்ளதுடன், ஹார்வர்ட் பிசினஸ் பல்கலைக்கழகத்தினது மூத்த நிர்வாக தலைமைத் திட்டங்களுக்கு அவர் தீவிரமாக பங்களித்துள்ளார்.

கெப்பிடல் அலையன்ஸ் லிமிடெட் நிறுவனத்தினது உறுப்பினராக பணியாற்றும் இவர், இலங்கை மருந்துத்துறை தொழிற்சங்கங்களின் தலைவராக உள்ளார்.

கஸ்தூரி 2019 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தால் இலங்கையின் மதிப்பு மிக்க பெண்களின் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டவராக கௌரவம் அளிக்கப்பட்டிருந்தார்.

நுகர்வோர், உடல்நலம், ஹோட்டல்களின் இயக்கம் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நுகர்வோரின் வாழ்க்கையில் ஹேமாஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட ஹேமாஸ் நிறுவனம் பங்களாதேஷ், மேற்கு வங்கம் மற்றும் மியான்மாரிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவையின் தலைமைத்துவ பலவீனமே தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது : சிவகரன்!

மாவை சேனாதிராஜாவினுடைய தலைமைத்துவ பலவீனமே இன்று தேர்தலில் பாரிய தாக்க நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமர்வு ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...