மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 ஆம் ஆண்டில் 1,000 இலங்கை பெண்களை வலுவூட்டும் முயற்சியில் Uber Eats!

- Advertisement -

பெண்கள் மற்றும் ஏனைய கவனிப்பாரற்ற சமூகங்களின் அங்கத்தவர்களுக்கான உறுப்பினர்களுக்கான Diviyata Diriya முன்னெடுப்பை மேம்படுத்துகிறது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது Diviyata Diriya முன்னெடுப்பின் ஒரு அங்கமாக, இலங்கையில் உள்வாங்கியுள்ள பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையை 100 இலிருந்து 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 1,000 வரை அதிகரிக்கவுள்ளதாக Uber Eats இன்று உறுதியளித்துள்ளது.

- Advertisement -பெண்கள் மற்றும் ஏனைய கவனிப்பாரற்ற சமூகங்களுக்கான நெகிழ்வுப் போக்குடனான பொருளாதார வாய்ப்புகளுக்கான சமத்துவத்திற்கு இது இடமளிக்கின்றது.

2018 ஒக்டோபரில் இல் Diviyata Diriya அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 100 இற்கும் மேற்பட்ட விநியோக பெண் பங்காளர்களுக்கு மகத்தான அளவில் நிதியியில் சுதந்திரத்தைப் பெறுவதற்கான தளத்தின் சக்தியை Uber Eats அதிகப்படுத்தியுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சார்ந்த சிந்தனை மற்றும் நெறிமுறைகள் தொடர்பில் Uber Eats உறுதிபூண்டுள்ளதுடன்,  வாழ்வில் அனைத்து நிலைமட்டங்களிலுமுள்ள பெண்களுக்கும் இலவச காப்புறுதி, பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட துரித சேவை அழைப்பு இலக்கம், உடற் சுகாதாரம் தொடர்பான தீர்வுகள், பாதுகாப்பற்ற பகுதிகளில் புவியியல் ரீதியான-தடுப்பு ஏற்பாடு மற்றும் தற்காப்பு கலைகள் போன்ற பயன்கள் மூலம் நிதியியல் ரீதியாக சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளிக்கிறது.

“இந்த பெண்களையும் அவர்களின் சிறந்த சாதனைகளையும் கொண்டாடுவதற்கு இதுவே பொருத்தமான ஒரு வாரம்.

2018 ஆம் ஆண்டில் இலட்சிய வேட்கை கொண்ட 2 பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட Diviyata Diriya மூலமாக இப்போது 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் மகத்தான அளவில் பொருளாதாரரீதியாக உள்வாங்கப்படுவதற்கான முதல் படியை எடுத்துள்ளனர்,” என்று Uber Eats, Sri Lanka தலைமை அதிகாரியான பாவ்னா தத்லானி அவர்கள் கருத்து வெளியிட்டார்.

“இந்த பெண்களின் சாதனைகளை செவி மடுப்பதும், அவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும் அவர்களுக்குத் தேவையான பயன்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வழிவகுத்துள்ளன.

தற்காப்பு கலை பயிற்சிகள் முதல் வீதியில் உடற் சுகாதார வசதிகள் வரை, தொழிலிலும் அதற்கு அப்பால் தனிப்பட்ட வாழ்விலும் அவர்களின் நல்வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து புத்தாக்கங்களை முன்னெடுத்து வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குக்கு இணங்க, Diviyata Diriya ஆனது பெண்களின் வாழ்க்கையையும் பரந்த சமூகத்தையும் மேம்படுத்தும் வகையில் நெகிழ்ச்சிப் போக்குடனான பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2018 ஒக்டோபரில் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Uber Eats நாடு முழுவதும் வளர்ச்சி கண்டு, இணையற்ற சேவையையும் வாடிக்கையாளர் திருப்தியையும் நிலைநாட்டி வருகிறது.

பிரதானமாக அழைப்பு அடிப்படையிலான உணவு விநியோக வலையமைப்புக்களில் சேவையாற்றி வருகின்ற Uber Eats ஆதிக்கம் செலுத்துவதிலும், இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஒன்றாக மாற்றுவதிலும் வெற்றி கண்டுள்ளது.

Diviyata Diriya முன்னெடுப்பு தொடர்பான விபரங்கள்

Diviyata Diriya (வாழ்க்கைக்கான ஊக்கம்), என்பது Uber Sri Lanka முன்னெடுக்கின்ற அனைத்து தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் பிரதான தளமாக காணப்படுவதுடன், அவற்றில் பலவும், பெண் சமூகங்களுக்கு நிதியியல் சுதந்திரத்தை எளிதாக்குவதற்கான தளத்தின் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளன.

Uber மூலமாக வாகனம் ஓட்டுவதன் மூலமாகவோ அல்லது Uber Eats மூலமாக விநியோக சேவையை வழங்குவதன் மூலமாகவோ, அத்தகைய சமூகங்களுக்கு தங்களின் மற்றும் பரந்த சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நெகிழ்ச்சிப் போக்குடனான பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதை Diviyata Diriya தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Uber Eats தொடர்பான விபரங்கள்:

உள்நாட்டு உணவகங்களைத் தேடவும் கண்டறியவும், ஒரு பொத்தானை இலகுவாக அழுத்தும் போது உணவை ஆர்டர் செய்யவும், Uber Eats மக்களுக்கு இடமளிப்பதுடன், நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் அவற்றை விநியோகம் செய்தும் வருகின்றது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு Eats app அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த வணிகமானது உலகளவில் 500 இற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சேவை செய்ய Uber இன் தொழில்நுட்பம் மற்றும் வழங்கல் சேவை ஏற்பாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்தியுள்ளது, இவை அனைத்தும் சராசரி விநியோக நேரத்தை 30 நிமிடங்களுக்குள் வைத்திருக்கும் வகையில் கையாளப்படுகின்றன.

மொத்த முன்பதிவுகளின் அடிப்படையில் சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய உணவு விநியோக தளமாக Uber Eats வளர்ச்சி கண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...