மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்காசியவின் தீவுச் சந்தைகளின் சிறந்ததைத் தேடும் 4 ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka)

- Advertisement -

பிராந்தியத்தின் மிகவும் கௌரவமான ரியல் எஸ்டேட் விருதுகளின் வெற்றிகரமான மீள்வருகை

• நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட black-tie நிகழ்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு 2020 ஜூலை 17 அன்று கொழும்பில்,  பொது பரிந்துரைகள் மே 1 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

- Advertisement -

• புதிய தொகுப்பானது மாலைத்தீவு மற்றும் அதன் தலைநகர் மாலேவில் அமைந்துள்ள சிறந்த குடியிருப்பு அபிவிருத்திகளையும் அங்கீகரிக்கவுள்ளது

கடந்த வருடம் மூன்றாவது முறையாகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற PropertyGuru Asia Property Awards (Sri Lanka),  2020 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் முக்கிய திகதிகளை அறிவித்துள்ளது.

இந்த 4ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards (Sri Lanka),  கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தன்னை மீளக்கட்டமைத்து வரும் செயன்முறையில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையில், ஆசியாவின் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் விருது வழங்கும் நிகழ்வானது தீவு தேசத்துக்கு திரும்புவதைக் குறிக்கின்றது.

நாட்டில் உள்ள சிறந்தவற்றில் சிறந்த ஆதனங்கள் மற்றும் டெவலப்பர்களை கொண்டாடும் இந்த black-tie gala இராப்போசன விருந்து மற்றும் விருது வழங்கும் நிகழ்வானது 17 ஜுலை 2020 வெள்ளிக்கிழமையன்று, கொழும்பு ஷங்ரில்லாவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக  பொதுமக்கள் மே 1 வரை பரிந்துரைகளை சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு நிகழ்வின் முக்கிய தினங்கள் வருமாறு:

ஜனவரி 21 அன்று பரிந்துரைகள் மற்றும் பதிவுகள் ஆரம்பமாகின. மே 1 வரை பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன்,  பதிவுகள் மே 8 நிறைவடைகின்றன. ஜூன் 8 முதல் 19 வரையான காலப்பகுதியில் தள பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், ஜூன் 30 அன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதேவேளை, ஜூலை 17 அன்று கொழும்பில் Gala இராப்போசனம் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுமட்டுமன்றி நவம்பர் 20 அன்று தாய்லாந்தின் பேங்கொக்கில் மாபெரும் இறுதி Gala நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2020 Property Guru Asia Property Awards (Sri Lanka) நிகழ்வின் போட்டிக்குரிய பிரிவுகள் தலைநகர் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் வட-கிழக்கு மாகாணங்களிலும் மிகச் சிறந்த நிர்மாணங்களை தேடவுள்ளது.

தெற்காசியாவில் அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த விருதுகள் மாலைத்தீவில் உள்ள குடியிருப்பு ஆதன (residential property) சந்தையின் முக்கிய நிறுவனங்களை அடையாளம் காணுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளும். இந்த விருதுகள், சிறந்த குடியிருப்பு அபிவிருத்தி (Best Residential Development)  (மாலைத்தீவு) மற்றும் சிறந்த குடியிருப்பு அபிவிருத்தி (Best Residential Development)  (மாலே) ஆகிய போட்டிக்குரிய பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும்.

2019 ஆம் ஆண்டுக்கான Property Guru Asia Property Awards (Sri Lanka), நாட்டின் பாரிய அபிவிருத்திகளுக்கு விருது வழங்கியது. இது தெற்காசியாவின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக மாறவுள்ள, 376 மீட்டர் உயரமான The One by The One Transworks Square (Pvt) Ltd. கடந்த ஆண்டின் விருதுகளில் ‘சிறந்த கலப்பு பயன்பாட்டு அபிவிருத்தி’  (Best Mixed Use Development ) விருதினை வென்றது. இந்த வானளாவி (skyscraper, ஆடம்பர மனைகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல், வணிகங்களுக்கான இடப்பகுதி, ஸ்கை பார் மற்றும் மேலும் அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இடம்பெற்ற 14 ஆவது PropertyGuru Asia Property Awards நிகழ்வின் இறுதிப் போட்டியில் 8 பாரிய திட்டங்களை பின் தள்ளியே The One, சிறந்த கலப்பு பயன்பாட்டு அபிவிருத்தி (ஆசியா) Best Mixed Use Development (Asia)  விருதினை வென்றிருந்தது.

இதேவேளை, Property Guru Asia Property Awards (Sri Lanka) நிகழ்வின் தலைவராக மீள திரும்பும் Paramount Realty நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான Dr.நிர்மால் டி சில்வா, 2020 ஆம் ஆண்டிற்கான பிராந்தியத்தின் ரியல் எஸ்டேட் வாய்ப்புகளில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கின்றார்.

“உலக வங்கியைப் பொறுத்தவரை, தெற்காசியா தற்போது அதிக அளவில் வளர்ந்து வரும் பிராந்தியமாகும். தேசிய அளவிலான கொள்கைகளின் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் சூழல் கட்டமைப்புடன் இந்த பிராந்தியம் தொழில்நுட்ப மையமாக வெளிப்படுவதை நாம் காண்கின்றோம். எதிர்காலத்தில் உந்து சக்தியாகவும், புத்தாக்கத்துக்கான மையமாகவும் இருப்பதற்கான ஆற்றலுடன் கூடிய தெற்காசியாவின் இந்த போக்கு ஊக்கமளிப்பதாகவும், உற்சாகமானதாகவும் இருக்கின்றது.”

அவர் மேலும் தெரிவிக்கையில்: “இலங்கை மெதுவாக ஆனால் நிச்சயமாக தேசிய அளவிலான நிகழ்ச்சி நிரல், கொள்கை கட்டமைப்பு மற்றும் பல பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் தங்கள் சூழல் கட்டமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப் பிராந்தியத்தில் நாம் பார்ப்பது முடிவல்ல, ஆரம்பம் என்று சொல்வது நியாயமானது.”

2020 Property Guru Asia Property Awards (Sri Lanka) நிகழ்வானது உத்தியோகபூர்வ சஞ்சிகையான PropertyGuru Property Report இனால் ஆதரவளிக்கப்படுகின்றது; உத்தியோகபூர்வ பொதுத் தொடர்புகள் பங்காளர் PR Wire Sri Lanka மற்றும் உத்தியோகபூர்வ மேற்பார்வையாளர் BDO ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு, உத்தியோகபூர்வ இணையத்தளம்: AsiaPropertyAwards.com

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...