மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடிக்கும் VIVO

- Advertisement -

COVID-19 தொற்று பரவலுக்கு மத்தியில் வாடிக்கையாளர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தும் VIVO, இலங்கை வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய COVID-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, இலங்கையில் உள்ள தனது அனைத்து சேவை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடியுள்ளது.

- Advertisement -

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஈடுசெய்யும் முகமாக vivo, இலங்கையில் அதன் ஸ்மார்ட்போன்களுக்கான உத்தரவாதத்தை நீடித்துள்ளது. இதன் பிரகாரம், 2020  மார்ச் 16 முதல் மே 30 வரையான காலப்பகுதிக்குள் உத்தரவாதம் காலாவதியாகும் vivo சாதனங்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான உத்தரவாதம் 2020 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட vivo சாதானங்களுக்கு மட்டும் இந்த நீடிப்பு தானாக செல்லுபடியாகும்.

வாடிக்கையாளர்கள் தமது IMEI இலக்கத்தைக் கொண்டு, vivo வின் இணையத்தளத்தில் தமது உத்தரவாதம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியும்.

மிகுந்த சமூக பொறுப்புணர்வுடன் கூடிய நிறுவனம் என்ற வகையில், இந்த உத்தரவாதக் கால நீடிப்பானது நுகர்வோருக்கு வசதியாக அமையுமென்பதுடன், vivo வின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது.

“இந்த முக்கியமான நேரத்தில், எங்கள் பொறுப்புணர்வு தொடர்பில் உறுதியாக உள்ளதுடன், COVID-19 தொற்று பரவிவரும் நிலையில் எமது வாடிக்கையாளர்களின் வசதி கருதியே இந்த உத்தரவாதம் நீடிக்கப்பட்டுள்ளது,” என Kevin Jiang, CEO, vivo mobile Sri Lanka தெரிவித்தார்.

இந்த நீடிப்பானது மறு அறிவித்தல் வரை மாற்றமின்றி இருக்குமென்பதுடன், vivo வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான அனைத்து விபரங்களையும், 0115 677 677 என்ற துரித அழைப்பு இலக்கம் ஊடாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அல்லது www.facebook.com/vivoSriLanka என்ற பேஸ்புக் பக்கத்திற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும்.

vivo ஏற்கனவே COVID-19 பரவுவதைத் தவிர்க்க பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதுள்ளது. இலங்கையில் உள்ள பணியாளர்கள் vivo பாவனையாளர்களுக்கு உதவும் பொருட்டு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கடினமான நேரங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், பணியாளர்கள் மற்றும் சக பிரஜைகளின் நல்வாழ்வே எங்கள் பிரதான நோக்கமாகும்.

VIVO பற்றி
 
vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது.
vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது.
vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட
நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது.
வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது.
தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர்.
3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...